தீவுப் பகுதியில் இரகசியமாக கசிப்பு உற்பத்தி – லட்சக்கணக்கான மில்லி லீட்டர் கோடா மீட்பு.!

139

மண்முனை பாலத்திற்கு அருகிலுள்ள தீவுப் பகுதியிலிருந்து ஒரு இலட்சத்து 80,000 மில்லி லீட்டர் கோடா, 67,500 மில்லி லீட்டர் கசிப்பு போன்றவை மீட்கப்பட்டுள்ளன. அவற்றை நேற்று (12.03.2026) மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பாலத்தருகில் அமைந்துதுள்ள தீவு பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இரு சந்தேகநபர்களை சம்பவ இடத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்புகளின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.