தீயில் கருகி 21 உயிர்பலி – பாகிஸ்தானில் பயங்கர சம்பவம்

144

பாகிஸ்தான், கராச்சி நகரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் ஒரு தீயணைப்பு வீரரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்து கடந்த சனிக்கிழமை ஏற்பட்டதாகவும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மீட்புப் பணிகள் தற்போது தொடர்ந்தும் நடக்கின்றன என மீட்புப் பணிக் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி அபித் ஜலால் தெரிவித்துள்ளார்.

மேலும், சிந்து மாகாண ஆளுநர் கம்ரான் டெசோரி  குறித்த கட்டடத்துக்குள் மேலும் 70 பேர் சிக்கியிருக்கலாம், எனவும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் குறிப்பிட்டார்

இந்த சம்பவம், கராச்சியின் வணிக வளாகங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை மீண்டும் பரிசீலிக்கவும், அரசாங்கத்தின் தீயணைப்பு மற்றும் அவசர உதவி அமைப்புகளின் திறனை மேம்படுத்தவும் வலியுறுத்துகிறது.