திருகோணமலையில் மரை இறைச்சியுடன் கைதான 23 வயது இளைஞர்.!

72

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரை இறைச்சியை மரை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று(23.02.2026) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மொரவெவ இரண்டாம் வாய்க்கால் பகுதியில் உள்ள வீடொன்றில், மறை இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்து, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்து வருவதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலின் அடிப்படையில், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோ 500 கிராம் எடையுள்ள மறை இறைச்சி கைப்பற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளரான 23 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மொரவெவ சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரவெவ பிரதேசத்திற்கு பொறுப்பான வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி தெரிவித்தார். மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.