திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் ட்விஸ்ட்!

139

திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் ட்விஸ்ட்!

தமிழக அரசியல் சூழலை பரபரப்பாக்கும் வகையில், வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கிறது என்ற கேள்விக்குப் பதிலாக—அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எடுத்த முடிவு சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது.

 

கூட்டணி தீர்மானம்—மாவட்ட செயலாளர்களின் கைகளில்!

 

கோயம்பேட்டில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில்

“யாருடன் கூட்டணி?” என்ற கேள்விக்கு ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் மூடிய பெட்டியில் எழுதிப் போடும் வாக்கெடுப்பு முறையில் கருத்து தெரிவித்துள்ளனர்.மாவட்ட செயலாளர்கள் கூறும் கருத்தே மக்களின் கருத்து.

அதைப் வைத்தே நாங்கள் கூட்டணியை அறிவிப்போம்.”

 

வரும் 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்

தேமுதிக தனது கூட்டணி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும்,

அதிமுக ராஜ்யசபா பேச்சுவார்த்தை பழைய விஷயம் என்றும் இப்போது முழுக்க முழுக்க சட்டமன்றத் தேர்தலையே கவனம் செலுத்துகின்றோம் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

 

உள்ளூர் தகவல்களின் படி

மாவட்ட செயலாளர்களிடையே நடைபெற்ற வாக்கெடுப்பில் திமுக கூட்டணிக்கே அதிக எண்ணிக்கை ஆதரவாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

கடலூர் மாநாட்டில் திமுக-தேமுதிக கூட்டணி அறிவிப்பா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடையவர்கள் இணைவீர்கள் என்ற எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு குறித்து அவர் கூறியது:

 

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். யார் ஏற்கிறார்கள், யார் ஏற்கவில்லை என்பது கூட்டணி அறிவிக்கும் போது மக்களுக்கு தெரியும்.”

 

பிரேமலதா மேலும் வலியுறுத்தியதாவது:

வரும் தேர்தல் மாறுபட்டது – சரியான மக்கள் விரும்பிய அணி வெற்றி பெறும் கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்படும் தேமுதிக மகத்தான கூட்டணியை அமைக்கும் எனவும் தெரிவித்தார்.

 

திமுகவா? அதிமுகவா?அல்லது தவேகவா? தேமுதிக முடிவு எதை நோக்கி செல்கிறது என்பது 9ஆம் தேதி கடலூரில் உறுதியாகும்.