தளபதி கிட்டு உட்பட 10 வீரர்களின் 33வது நினைவேந்தல் – ஜனவரி 16 இல் கிட்டுப்பூங்கவில் நடைபெற ஏற்பாடு

157
  • வங்கக்கடலில் காவியமான தளபதி கிட்டு உட்பட 10 வீரர்களின் 33வது நினைவேந்தல் – ஜனவரி 16 அன்று

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், வங்கக்கடலில் உயிர்நீத்த தளபதி கிட்டு உள்ளிட்ட பத்து வீரர்களின் 33வது நினைவேந்தல் நிகழ்வு வருகின்ற 16.01.2026 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கிட்டுப் பூங்காவில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, நல்லூர் தியாக தீபம் திலீபன் ஆவணக் காப்பகம் தயாரித்துள்ள “கிட்டு – ஒரு தனி மனித வரலாறு” என்ற தலைப்பில் தளபதி கிட்டுவின் வாழ்வியல் மற்றும் போராட்ட வரலாற்றை பிரதிபலிக்கும் ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்படும்.

உள்ளூர் மக்களும் ஆர்வலர்களும் இந்நினைவேந்தலில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.