தரம் 07 மாணவன் மீது அதிபர் கொடூர தாக்குதல்.!!

87

பண்டாரகம, வெல்மில்லா பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர், ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்து, அவரை கொடூரமான முறையில் தாக்கியதாக பண்டாரகம காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

மாணவரின் தந்தை அளித்துள்ள முறைப்பாட்டின்படி, அந்த அதிபர் மாணவரின் முகத்தில் இரு கைகளாலும் பலமுறை அறைந்துள்ளார்.

இந்தத் தாக்குதலால் தனது மகனின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கடுமையான வலியின் காரணமாக அவனால் பல் துலக்கக்கூட முடியவில்லை என்றும் தந்தை தெரிவித்துள்ளார்.

தரம் 07 மாணவன் மீது அதிபர் கொடூர தாக்குதல் | Principal Brutally Assaulting Grade 7 Student

 

காயமடைந்த மாணவர் முதலில் சிகிச்சைக்காக வேதர மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; பின்னர், மேல் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.