தமிழ் தேசிய அரசியல் செயற்பாடுகளில் அடுத்தகட்ட நகர்வு ஒஸ்லோவில் முன்னணி

144

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டம் — நோர்வே, ஒஸ்லோவில் புலம்பெயர் மக்களுடன் சந்திப்பு | 04.01.2026

 

தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் இன அழிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான அடுத்தகட்ட அரசியல் நகர்வாக, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இன்று (04.01.2026) நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்பொன்றை நடத்துகிறது.

இந்த சந்திப்பில் கட்சியின் தலைவர் கயேந்திரகுமார், செயலாளர் கயேந்திரகுமார், கொள்கை பரப்பு செயலாளர் காண்டீபன், ஊடகப்பேச்சாளர் சுபாஸ், சர்வதேச விவகார பொறுப்பாளர் தீபன் திலீசன் ஆகியோர் கலந்து கொண்டார். சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகள், அரசியல்–மனித உரிமை தளங்களில் முன்னெடுக்க வேண்டிய செயல் திட்டங்கள், மேலும் எதிர்கால போராட்டப் பாதைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் சமூகத்தின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன், தமிழர் தாயகத்தின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.