ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

138

ஜப்பானின் மிகப்பெரிய தீவான ஹொன்ஷுவின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்தத் தகவலும் இல்லை, மேலும் அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.