சோர்வான கண்களை அழகாக்க வேண்டுமா? இரண்டே வாரத்தில் கருவளையத்தை விரட்ட இதைப் பயன்படுத்துங்கள்!

146

பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

அந்தவகையில், கருவளையத்தை நீக்க உதவும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கடுக்காய்- 1
  • தண்ணீர்- 2 ஸ்பூன்

முதலில் ஒரு கல்லில் தண்ணீர் சேர்த்து கடுக்காயை நன்கு உரசி எடுத்தால் பேஸ்ட் போல் ஒரு கலவை கிடைக்கும்.அதனை அப்படியே கைகளால் எடுத்து கருவளையம் உள்ள பகுதியில் தடவவும்.
பின்னர் இதனை ஒரு 20 நிமிடம் அப்படி நன்கு உலர விடவும். இதற்கடுத்து குளிர்ந்த நீரால் இதனை நன்கு கழுவிக்கொள்ளவும்.இதனை தினமும் இரவு தூங்கு முன் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கருவளையம் நிரந்தரமாக நீங்கிவிடும்.