சேப்பாக்கத்தில் CSK அதிரடி – கொல்கத்தாவை 32 ரன்களில் வீழ்த்தி 2வது வெற்றி

136

ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.

சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் விரைவில் அவுட்டான நிலையில், சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 38 ரன்கள் விளாசி அணியின் ரன் வேகத்தை அதிகரித்தார்.

சர்ப்ராஸ் (23) மற்றும் சிவம் துபே (13) ஆகியோரின் பங்களிப்புடன் சிஎஸ்கே நல்ல இலக்கை நிர்ணயித்தது. பதிலுக்கு விளையாடிய கொல்கத்தா அணியில் அஜிங்யா ரகானே (28), அங்ரிஷ் ரகுவன்ஷி (27), ரமன்தீப் சிங் (35), ரோமன் பவெல் (31) ஆகியோர் போராடினாலும், தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி தொடரில் தனது 2வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அடுத்த போட்டிகளில் அணியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.