செரிமானத்திற்காக வசம்பு கொடுக்கிறீர்களா? – புற்றுநோய் அபாயம் குறித்து வெளிவந்த பகீர் உண்மைகள்.

120

பிறந்த குழந்தைக்கு வசம்பு  கொடுப்பது செரிமானக் கோளாறுகள் வராது.. வயிறு பெருக்கும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால் இன்றைய மருத்துவர்கள் அது முற்றிலும் தவறான போக்கு என எச்சரிக்கின்றனர்.

முன்பெல்லாம் பிறந்த குழந்தைக்கு ஒரு வயது வரை பாட்டி வைத்தியங்கள், கை வைத்தியங்கள் என இயற்கை மருந்துகளைதான் அதிகமாக கொடுப்பது வழக்கமாக இருந்தது. இன்றும் சில இடங்களில் அவை நடைமுறையில் இருக்கின்றன. அந்த வரிசையில் வசம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தை பிறந்த உடனேயே நாட்டு மருந்து கடைகளில் வசம்பு வாங்கி வைத்துவிடுவார்கள். இதை அரைத்து குழந்தையின் நாக்கில் வைப்பதால் செரிமானக் கோளாறுகள் வராது.. வயிறு பெருக்கும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால் இன்றைய மருத்துவர்கள் அது முற்றிலும் தவறான போக்கு என எச்சரிக்கின்றனர். என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.வசம்பு என்பது இஞ்சி குடும்பத்தை சேர்ந்த ஒருவகை மூலிகையாகும். இதற்கு பேர் சொல்லா மருந்து, பிள்ளை வளர்த்தி , உரைப்பான் என பல பெயர்கள் உண்டும். வசம்பு ஆறு, ஏரிக்கரை ஓரங்களில் வளரக்கூடியது. இந்தியாவில் கேரளா, மணிப்பூர் , நாகமலையில்தான் அதிகமாக விளைகிறது. ஏனெனில் இது சதுப்பு நிலங்கள் , களிமண் என நீர் பிடிப்பு பகுதிகளில்தான் செழித்து வளரும். இதில் எண்ணற்ற நன்மைகள் இருப்பதால் நாட்டு வைத்தியங்கள், ஆயுர்வேத மருத்துவ முறையில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் பிரதீப் ஐன்ஸ்டீன் குழந்தைகளுக்கு வசம்பு கொடுப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை விரிவாக விளக்கியுள்ளார். அதில் பிறந்த குழந்தைகளுக்கு வசம்பு கொடுப்பது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என கூறியுள்ளார்.வசம்பு எண்ணற்ற நன்மைகளைக் கொண்டிருந்தாலும் பிறந்து சில நாட்களே ஆன அல்லது சில மாதங்களே ஆன குழந்தைகளுக்கு கொடுக்கும்போது என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும் என பட்டியலிட்டுள்ளார்.
வசம்பில் பீட்டா ஆசரோன் ( Beta Asaron ) என்னும் மூலப்பொருள் மிகவும் அதிகமாக உள்ளது. இது பிறந்த குழந்தைகளுக்கு பல வகையான பிரச்சனைகளை தரக்கூடியாதாக உள்ளது. அவை என்னென்ன என்பதை மருத்துவர் 4 வகைகளாக பட்டியலிடுகிறார். அவை..
advertisement

1 ) நியூரோடாக்ஸிசிட்டி : பொதுவாகவே நம் மூளையை சுற்றி நச்சுக்கள் ஊடுருவாமல் பார்த்துக்கொள்ள ஒரு தடுப்பு சுவர் உள்ளது. அதன் வேலை இந்த நச்சு கலந்த பொருட்கள் மூளையை அடையாமல் பார்த்துக்கொள்வதாகும். இந்த இரத்த மூளை தடுப்புச் சுவரானது பிறந்த ஒரு வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு வளர்ச்சி முழுமையாடையாமல் இருப்பதால் வேலை செய்யாது. எனவே வசம்பில் உள்ள பீட்டா ஆசரோன் என்னும் நச்சு எளிதாக இரத்தத்தில் கலந்து மூளையை ஊடுருவும் வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு ஊடுருவினால் நியூரோடாக்ஸிசிட்டி என்னும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் பிரச்சனைகள் வரலாம். அதாவது குழந்தைகளுக்கு வலிப்பு பிரச்சனை , வளர்ச்சி குறைபாடு பிரச்சனைகள் கூட வரும் வாய்ப்பு அதிகம் என்கிறார் மருத்துவர்.

2) தீவிரமான வயிற்று பிரச்சனை : குழந்தைகளில் வயிற்றில் உள்ள எதிர்ப்பு சக்தி மற்றும் குடல் ஆற்றலை குறைத்து தீவிரமான தொற்றுகளை உண்டாக்கும். இந்த தொற்றுக்கு நெக்ரோடைசிங் (NEC) என்று பெயர். இந்த பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகள் இறந்து போகும் வாய்ப்பு கூட அதிகம் என்கிறார் மருத்துவர் பிரதீப்.

3) புற்றுநோய் ஆபத்து : இந்த வசம்பை விலங்குகளுக்குக் கொடுத்து சில ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. அதில் இந்த பீட்டா ஆசரோன் என்கிற பொருளானது கார்சினோஜெனிக்காக மாறுவதை கண்டறிந்துள்ளனர். அதாவது புற்றுநோயை உண்டாக்கக்கூடிய தன்மை இருப்பதாக கண்டறிந்துள்ளனர். எனவே குழந்தைக்கு கொடுப்பதால் புற்றுநோய் கூட வரலாம் என எச்சரிக்கிறார்.4) லிவர் டாக்ஸிசிட்டி : நாம் சாப்பிடும் எந்த உணவும் நம் கல்லீரல் மூலமாக உடைக்கப்பட்ட உடலை விட்டு வெளியேறுகிறது. ஆனால் பிறந்த குழந்தைக்கு கல்லீரல் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காது. எனவே இந்த பீட்டா ஆசரோன் என்னும் பொருள் கல்லீரலால் உடைக்க முடியாமல் உடம்பிலேயே தங்கி மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளை பல மடங்கான அதிகரிக்கக்கூடும் என Indian Academy of Pediatrics செய்த ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளதாக மருத்துவர் மேற்கோள் காட்டுகிறார்.