செட்டிகுளம்-முதலியார்குளம் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் பொங்கல் நிகழ்வு!

279

செட்டிகுளம் முதலியார்குளம் கிராமத்தில் சிறுவர் பொங்கல் நிகழ்வு.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு முதலியார்குளம் வேல்முருகன் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களின் பொங்கல் விழா நிகழ்வு இன்றைய தினம்(18.01) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உத்தியோகத்தர்கள் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் ஆலய பரிபாலன சபையினர் பெற்றோர்கள் மற்றும் வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசபையின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொணடனர்.

இந்நிகழ்வில் பண்பாட்டு முறையில் இயற்கைக்கு நன்றி செலுத்தும் படியாக பொங்கல் பொங்கி வழிபடப்பட்டதுடன் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Full Video