மரபு வழி நடைபெற்ற செட்டிகுளம் மகாவித்தியாலய பொங்கல் விழா!

297

செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் பொங்கல் விழா – பழைய மாணவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் பாசப்பறவைகள் நன்பர்கள் வட்டத்தின்  அனுசரனையில் பழையமாணவர்களின் பங்கேற்போடு 23.01.2026 அதாவது நேற்று சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள்,  பழைய மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலனிருப்பிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வானது தமிழர் மரபு மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் மரபை வெளிப்படுத்தியதோடு உழவர் பெருமையை எடுத்தியம்பும் படியாக அமைந்திருந்தது.