செட்டிகுளம் பிரதான வீதியில் விபத்து – நால்வர் படுகாயம்!

229

செட்டிகுளம் பிரதான வீதியில், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்வீதி விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது வீதியில் நடமாடிய மாடுகளுடன் ஒரு வாகனம் மோதியதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே  வந்த மற்றொரு வாகனத்துடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது காயமடைந்தவர்கள் உடனடியாக செட்டிகுளம் தள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் கடுமையான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் மூலம்  அறிய முடிகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.