செட்டிகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்பு; வேலைத்திட்டம்

205

பேரிடருக்குப் பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு – மூன்று நாள் வேலைத்திட்டம் செட்டிகுளம் நகரப்பகுதியில்.

2026.01.09 அன்று வெங்கலச்செட்டிகுளம் பரதேசசபையினரோடு இணைந்து  பிரதேச சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து செட்டிகுளம் பகுதியின் பல பகுதிகளிலும்  முன்னெடுக்கப்பட்டது.

பேரிடருக்குப் பின்னர் பிரதேசத்தின் பல பகுதிகளிலும்  மழைநீர் தேங்கியும், மற்றும் குப்பைகள் நிறைந்தும்  காணப்பட்ட நிலையில் இத்துரித செயற்பாடு தற்போது வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையால் மூன்று நாட்களாக நடமுறைப்படுத்தப்பட்டது. அத்துடன் இத்திட்டமனது தேசிய வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதேசத்தின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் இவ் வேலைத்திட்டம் டெங்கு கொசு இனப்பெருக்கத்தை  கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என  எதிர்பார்கப்படுகிறது.