சுயதொழில் வளர்ச்சிக்கான – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நடவடிக்கை

227

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை – வாழ்வாதார உதவி திட்டம் நடைமுறைப்படுத்தல்.

 

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதேச சபையின் சொந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயற்றிட்டம், பொருளாதார ரீதியாக பலவீனமடைந்த குடும்பங்களுக்கு நேரடியாக பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக தவிசாளர் சுப்ரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

பசி பட்டவர்களுக்கு உணவை மட்டும் வழங்குவது அல்லாமல், அவர்கள் தங்களைத் தாங்களே முன்னேற்றிக்கொள்ளும் திறன்களை உருவாக்கித் தர வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. “பசித்தவர்களுக்கு மீனை கொடுக்காதே, மீன்பிடிக்கத் தூண்டிலை கொடு” என்ற காள்மார்க்ஸ் அவர்களின் சிந்தனையை செயல்முறையாகக் கொண்டுவரும் வகையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வாதார உபகரணங்கள் மற்றும் தேவையான ஆதரவுகள் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில், பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர், மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுடன் கலந்துரையாடினர். திட்டம் பயனாளிகளின் நீண்டகால பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முயற்சி, பிரதேச சபையின் தன்னார்வத் திட்டங்களுக்கிடையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.