சுமார் 3 இலட்சம் பெறுமதியான கொத்தல ஹிம்புட்டுவுடன் சீன நாட்டவர் கைது!

189

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக சீனாவுக்கு கொத்தல ஹிம்புட்டு தாவரத்தை கடத்த முயன்ற 30 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாவரத் தொகுதியுடன் அவர் பிடிபட்டுள்ளார்.

சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, ‘சைனா ஈஸ்டர்ன்’ MU-714 விமானத்தில் சீனாவிற்கு பயணிக்க வந்திருந்த அவரது பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 48 கிலோகிராம் 600 கிராம் எடையுடைய கொத்தல ஹிம்புட்டு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இலங்கையின் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த தாவரம் பாதுகாக்கப்பட்ட இனமாகும்; இதனை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டதாகும்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த தாவரத் தொகுதி அரசுடமையாக்கப்பட்டதுடன், கைதான நபருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.