சீனப் பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் – தமிழ் முறைப்படி நடந்த சர்வதேசத் திருமணம்.

164

தமிழக மாவட்டம் திருவண்ணாமலையைச் சேர்ந்த நபர் ஒருவர், சீனாவைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட வந்தவாசியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளார்.

அங்கு சீனாவின் ஷாங்காயைச் சேர்ந்த வாங் யாயா என்ற பெண்ணை அவர் சந்தித்துள்ளார். இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் அங்கேயே பதிவுத் திருமணம் செய்துள்ளனர். பின்னர் சீன முறைப்படி இந்த ஜோடி திருமணம் செய்துள்ளது.

இந்த நிலையில், வெங்கடேசன் – வாங் யாயா இருவரும் தமிழ்நாட்டிற்கு வந்த தமிழ்முறைப்படி தாலி கட்டி, சொந்த பந்தங்களின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

மணப்பெண்ணின் விருப்பப்படி சொந்த வீடு கட்டி தமிழ்நாட்டில் திருமணம் செய்ததாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது மனைவி வாங் யாயாவிற்கு தமிழ் கலாச்சாரத்தின் மீது மரியாதையும், ஆவலும் இருப்பதாக குறிப்பிட்டார்.