சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய 5 பொருட்கள் இதோ!

77

நமது உடலில் பல முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகங்களும் ஒன்று.
சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து யூரியா போன்ற கழிவுகளை வடிகட்டும் வேலையை செய்கின்றன.மேலும் செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளில் உள்ள அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகின்றன.

சிறுநீரகம், சிறுநீரை உருவாக்குவதற்கும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்தவகையில், சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

1. சிட்ரஸ் பழங்கள்- இதில் அதிகம் உள்ள வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து நச்சுக்களை திறம்பட வெளியேற்றும். அதுவும் இதில் சிட்ரேட்டுகள் அதிகளவில் இருப்பதால், இது சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

2. செலரி- இது சிறுநீர் பெருக்கியாகச் செயல்பட்டு, சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கவும், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.

3. வெள்ளரிக்காய்- வெள்ளரிக்காயில் உள்ள டையூரிக் விளைவுகள் சிறுநீரக கற்கள் வருவது தடுக்கப்படுவதோடு, சிறுநீரகங்களின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்.

4. தண்ணீர்- தினமும் தவறாமல் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் போது உடல் நீரேற்றத்துடனும் இருக்கும், உடலில் இருந்து நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.

5. கொழுப்பு மீன்கள்- ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். இதனால் சிறுநீரகம் ஆரோக்கியம் மேம்படும்.