சாதம் வடித்த கஞ்சியின் அழகு ரகசியம்: பிக்பாஸ் பிரபலம் பகிர்வு

131

சாதம் வடித்த கஞ்சியை வைத்து எப்படி உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்றலாம் என்று பிக்பாஸ் பிரபலம் தெரிவித்துள்ளார்.

சாதம் வடித்த கஞ்சியின் மகத்துவம் உங்களுக்குத் தெரியுமா? அரிசி களைந்த நீரில் ஃபீனால் (Phenol) மற்றும் ஸ்குவாலின் (Squalene) போன்ற சருமத்திற்கு நன்மை பயக்கும் ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் (Phytonutrients) ஏராளமாக உள்ளன. இந்த ஃபீனால் சருமத்தை வெண்மையாக்க உதவுகிறது. அதேபோல், ஸ்குவாலின் உங்கள் சருமம் வறண்டு போகாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கச் செய்கிறது.

சாதம் வடித்த தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் சருமம் மென்மையாக மாறும். அதுமட்டுமல்லாமல் தோலில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து இளமையாக வைத்திருக்க உதவும். வெயிலால் ஏற்படும் தோல் சிவந்து போதல் அல்லது அரிப்பிற்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். ஜப்பான் நாட்டில் உள்ள பல பெண்களும் இந்த சாதம் வடித்த தண்ணீரை தான் தங்கள் முகங்களுக்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபல நடிகை சாக்ஷி அகர்வால், ஒரு பைசா கூட செலவில்லாமல் சாதம் வடித்த கஞ்சியைப் பயன்படுத்தி எப்படி பளபளப்பான சருமத்தைப் பெறுவது என்பது குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவாது, இது ஒரு இயற்கையான மற்றும் செலவு குறைந்த அழகு முறையாகும். தலைக்குக் குளிக்கும்போது, கடைசியாக சாதம் வடித்த கஞ்சியால் கூந்தலை அலசலாம். இது கூந்தலுக்கு நல்ல பளபளப்பைக் கொடுக்கும்.

மேலும், அந்தக் கஞ்சியில் ஓட்ஸ் சேர்த்து ஊறவைத்தும் குளிப்பதற்குப் பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு மென்மையான உணர்வை அளிக்கும். சந்தையில் கிடைக்கும் ரைஸ் வாட்டர் ஷாம்பூ,, ரைஸ் வாட்டர் ஃபேஸ் வாஷ் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு, அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற பொருள்கள் மற்றும் ரசாயனங்கள் குறித்து உங்கள் சரும மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நல்லது. இயற்கையான முறைகள் எப்பொழுதும் பாதுகாப்பானவை என்றார்.