சாணக்கியன் தொடர்ந்த வழக்கில் எதிராளிகள் சார்பில் குருபரன் – இன்று விசாரனை

150

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஊடகங்கள் மூலம் தன்னைப் பற்றி அவதூறு செய்திகளை வெளியிட்டதாகக் கூறி தாக்கல் செய்த நிகழ்நிலைக் காப்புச் சட்ட (Online Safety Act) வழக்கு, நாளை (வெள்ளிக்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த வழக்கில் எதிராளிகளாக ஊடக நிறுவனங்கள் உட்பட 23 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு பகுதியினரின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றில் ஆஜராக உள்ளார்.

மேலும், நிகழ்நிலைக் காப்புச் சட்டத்திற்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி முன்பு பலமான எதிர்ப்புகளை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அதே கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தற்போது அந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.