சலூனுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, பலர் காயம்!

102

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள சலூன் (Barber Shop) ஒன்றிற்குள் இன்று பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜிந்துப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள முடித்திருத்தகம் ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் படுகாயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று காலை களுத்துறை, வடக்கு மடிய மன்கடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுடப்பட்டு காயமடைந்த 32 வயதுடைய நபர், களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் சந்தேக நபர்கள் குறித்த மேலதிக விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.