சரிகம இசைப் போட்டியில் சாதித்த வர்ஜாவுக்கு யாழில் உற்சாக வரவேற்பு!   

28

இந்தியாவின் தமிழ்நாட்டின் சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப மாபெரும் இசைப் போட்டி நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியின் இறுதிச் சுற்று வரை பயணித்து இறுதிச் சுற்றில் ஐந்து இடங்களுக்குள் ஒருவராகத் தெரிவாகிச் சாதித்த திருகோணமலை வெருகல் இலங்கைத்துறை முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஈழத்துச் சின்னக் குயில் செல்வி. சசிதரன் வர்ஜா இன்று (14.06.2026) மதியம் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாகத் தமிழர் தாயகத்தை வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.