சம்மாந்துறையில் வயல்வெளியில் 50 வயது ஆண் சடலம் மீட்பு.!

76

சம்மாந்துறையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் பின்புறத்தில் உள்ள வயல்வெளிப் பகுதியில் புதன்கிழமை (01) கண்டெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம், சம்மாந்துறை பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஆரம்பத்தில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்த சடலம், பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் சம்மாந்துறை சாலி வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபருடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த நபரின் மரணத்துக்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவராத நிலையில், சட்ட மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதேவேளை, சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்; மரணத்தின் பின்னணி குறித்து விரைவில் மேலதிக தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.