சகோதரனைக் கத்தியால் குத்திய 35 வயது இளைஞர்; நயினாதீவில் பதற்றம்.!!

182

யாழ்ப்பாணம் நயினாத்தீவில் உறவுமுறை சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது, ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

43 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கக்கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தகராறில் ஈடுபட்ட 35 வயதான சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.