கோலகலமாக பிராம்ப்டனில் நடைபெற்ற TEFA Futsal World Cup – 2026

157

TEFA Futsal World Cup 2026 பிராம்ப்டனில் மாசி 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

 

தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம் (TEFA) Futsal World Cup 2026 போட்டி கனடாவின் பிராம்ப்டன் நகரில் பிப்ரவரி 14 மற்றும் 15, 2026 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

இந்த சர்வதேச உள்புற ஷாட்ஸல் சாம்பியன்ஷிப் போட்டியை Canadian Tamil Sports Association (CTSA) ஏற்பாடு செய்த போட்டிகள் Save Max Sports Centre மைதானத்தில் நடைபெற்றது.

இந்த உலகக்கோப்பை தொடரில் கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு கழித்தனர்.

பிராம்ப்டன் நகரம் பல்வகை இன, மொழி சமூகங்கள் வாழும் நகரமாக அறியப்படுகின்றது. இந்நிலையில், இந்த போட்டி விளையாட்டைத் தாண்டி தமிழர் பாரம்பரியத்தையும் தமிழ் சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் தளமாக அமைந்தது.

உயர்தர போட்டித் திறன், சர்வதேச நட்புறவு, மற்றும் கலாச்சார பெருமையை ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வு, உலக அரங்கில் தமிழர் விளையாட்டு திறமையை முன்னிறுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்த இருநாள் விளையாட்டு விழா, விளையாட்டு ரசிகர்களுக்கும் சமூகத்தினருக்கும் உற்சாகமான அனுபவத்தை வழங்கியிருந்தது.