கொழும்பில் ஹோட்டல் அறையில் பெருந்தொகை போலி டொலர்களுடன் சிக்கிய நால்வர்

47

வெளிநாட்டில் அச்சிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 100 அமெரிக்க டொலர் மதிப்புள்ள 60 கட்டு தாள்களின் மொத்த பெறுமதி சுமார் 21 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போலி நாணயத்தாள்கள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், இந்த மோசடி வலையமைப்புடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவரும் தொடர்புடையதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த போலி டொலர் நோட்டுகளை ஒரு டொலருக்கு 284 ரூபாய் என்ற விகிதத்தில் மாற்றத் திட்டமிட்டிருந்ததாகவும், இலங்கையிலுள்ள வர்த்தகர்களை ஏமாற்றி அவற்றை பரிமாறியிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை(09.06.2026) அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அமெரிக்க டொலர் 600,000 பெறுமதியான போலி பணத்தாள்களை வைத்திருந்த பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை இன்று(08.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, கொழும்பில் அமைந்துள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.