கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; ஹோட்டல் உரிமையாளர் வைத்தியசாலையில்

86

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொழும்பு, தெஹிவளை – மெரைன் ட்ரைவ் பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூடு இடம் பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உந்துருளியில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், விருந்தகத்தின் உரிமையாளர் காயங்களுடன் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.