கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் தீ விபத்து – ஒரு வீடு முழுவதும் சாம்பல், 6 பேர் நிர்கதி

85

கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் தீ விபத்து – ஒரு குடியிருப்பு முழுவதும் சாம்பல்; 6 பேர் நிர்கதி.

கொட்டகலைப் பகுதியில் அமைந்துள்ள ஆகீல் தனியார் தோட்டத்தில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீப்பரவல், அப்பகுதி தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்றை முற்றிலும் சாம்பலாக்கியுள்ளது.

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், அருகிலிருந்த மேலும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்குச் சென்ற  திம்புள்ள பத்தனை பொலிசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை அணைக்க முயற்சி செய்த போதிலும், ஒரு வீடு முழுமையாக எரிந்து சிதிலமாகியதோடு, குடும்பத்தினரின் உடமைகள் எதுவும் காப்பாற்ற முடியவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் பத்தனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நிர்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.