கேகாலை மாணவர் மோதல் வைரல் வீடியோ: பொலிஸார் விளக்கம்

194

கேகாலை பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதுகுறித்து பொலிஸார் விளக்கமொன்றை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் 2025 பெப்ரவரி 21 அன்று கேகாலையிலுள்ள பிடிஹும சந்தியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கேகாலை பிரதான பொலிஸ் நிலையத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. விசாரணைகளின் மூலம் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பின்னர் சந்தேகநபர்கள் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு இடையில் உண்மைத்தன்மை குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.