கெமிக்கல் இல்லா உதட்டுச்சாயம் வீட்டிலேயே தயாரிக்கும் எளிய முறை

150

பெரும்பாலான பெண்கள் தங்களை அழகுப்படுத்துவத்றகாக உதடுகளுக்கு உதட்டுச்சாயத்தை பூசுகின்றனர்.

ஆனால் கடைகளில் விற்பனை செய்யப்படும் உதட்டுச்சாயங்களில் பல கெமிகல்ஸ் உள்ளன.

இதனால் உதடு கருமையாதல், புற்றுநோய் ஏற்படல், உதடு அரிப்பு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

உதடுகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு வீட்டிலேயே உதட்டுச்சாயம் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம்.

தேவையானவை ; 

  • பீட்ருட்
  • நெய் 1/2 தே.கரண்டி
  • தேன் 1/2 தே.கரண்டி

செய்முறை ; 

  1. பீட்ருட் ஒன்றை நன்றாக சீவியதும், அதனை சிறிது சிறுதாக வெட்டி அரைக்க வேண்டும்.
  2. அரைத்த பீட்ருட் சாறை மூன்று முறை வடிக்கட்டி எடுக்க வேண்டும்.
  3. அதன் பின்னர் பீட்ருட் சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
  4. பிறகு அதில் நெய் மற்றும் தேன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
  5. இறுதியாக விருப்பமான ஒரு சிறிய போத்திலில் ஊற்றி 20 நிமிடங்கள் ஆற விட்டு எடுத்தால் உதட்டுச்சாயம் தயார்.