கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம்: விசாரணை தீவிரம்.!

201

கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நோர்வூட் பகுதியில் இடம்பெற்றதுடன், நோர்வூட் – பொககவந்தலாவா மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள நோர்வூட் பாலத்திற்குக் கீழே சடலம் மிதப்பதாக பிரதேசவாசிகள் நேற்று தகவல் வழங்கியுள்ளனர்.

காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கெசல்கமுவ ஆற்றில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதுவரை சடலத்தின் அடையாளம் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸ் பிரிவின் குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சடலத்தின் அடையாளம் மற்றும் மரண காரணம் குறித்து விசாரணைகள் தொடர்ந்துவருகின்றன.