குழந்தை பெற திட்டமிடுகிறீர்களா? இந்த பரிசோதனை முக்கியம்.!!

56

விந்தணுக்களின் ஆரோக்கியத்தை அறிவியல்பூர்வமாக துல்லியமாக அறிய விரும்பும் தம்பதியர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் சென்று பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம் என அவர் தெரிவிக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் தம்பதியர்கள் மற்றும் குடும்பத்தினர் விந்தணுக்களின் ஆரோக்கியத்தினை பரிசோதிப்பது அவசியம் என மருத்துவர் யோக வித்யா வலியுறுத்துகிறார். மருத்துவர்களின் கணிப்பின்படி, ஆண்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்குமானால், குழந்தை பெற்றுக்கொள்ள சிக்கல்கள் குறைவாக இருக்கும். அதனால், திருமணத்திற்கு முன்பாகவே விந்தணுக்களை பரிசோதித்து, ஏதேனும் சிக்கல் இருந்தால் அதனை சரிசெய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

மருத்துவர் யோக வித்யா வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஒரு முறையை முன்மொழிகிறார். அவர் கூறும் விதமாக, ஒரு கிளாஸ் நீரில் விந்தணுவை வைக்கும்போது அது நேராக தண்ணீரின் அடிப்பகுதிக்கு செல்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். அப்படியானால் அது ஆரோக்கியமாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், விந்தணு விரைவாக கரைந்து மேலே மிதந்து காட்சியளித்தால், அது ஆரோக்கியமற்றது என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு: நல்ல முட்டையை தண்ணீரில் போடும் போது அது உடனே தண்ணீரின் அடியில் செல்வது போலவே, ஆரோக்கியமான விந்தணும் நீரில் அடியில் செல்லும். ஆனால் கெட்டிய முட்டை மிதக்கும் போலவே, ஆரோக்கியமற்ற விந்தணு மேலே மிதக்கும்.