குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம் பட்டதாரி தாய் – 19 நாள் சிசு பலி.!

205

குருநாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பகுதியில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த 19 நாள் சிசுவின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 30 வயதான பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில் தாய், தந்தை மற்றும் குழந்தையும் வீட்டில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திடீரென சத்தம் கேட்டு கணவன் விழித்தபோது, ​​குழந்தையும் தாயும் கிணற்றில் விழுந்ததை கண்டுபிடித்துள்ளார். கிணற்றில் விழுந்த நிலையில், மனைவி அங்குள்ள குழாய் உதவியுடன் வெளியே வந்துள்ளார்.

குழந்தை பெற்ற பின்னர் ஏற்பட்ட மனநிலை குழப்பம் காரணமாக, சிசுவுடன் கிணற்றில் குதித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த தம்பதியினருக்கு இடையில் எந்தவித முரண்பாடும் இதுவரை ஏற்பட்டதில்லை என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.