குழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய உணவு: கறிவேப்பிலை பாஸ்தா

167

கறிவேப்பிலை செரிமானத்தை மேம்படுத்த, உடல் எடையைக் குறைக்க, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது முடி வளர்ச்சி, நரம்பு மண்டல ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

அந்தவகையில், குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான கறிவேப்பிலை பாஸ்தா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
எண்ணெய்- 2 ஸ்பூன்
கறிவேப்பிலை- 2 கைப்பிடி
பிஸ்தா- 15
பூண்டு- 10 பல்
வெங்காயம்- 2
பாஸ்தா- 1 கப்
மைதா- 1 ஸ்பூன்
பால்- 2 கப்
காய்ந்த மிளகாய் விதை- 2 ஸ்பூன்
ஆர்கனோ- 1 ஸ்பூன்
மிளகு தூள்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி ஆறவைத்து மிக்ஸி ஜாரில் அதனுடன் பிஸ்தா சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.பின் வாணலில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி ஆறவைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதித்ததும் பாஸ்தா சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இதற்கடுத்து வாணலில் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதனையுடன் மைதா மற்றும் பால் சேர்த்து கலந்துகொள்ளவும்.

பின்னர் அதில் காய்ந்த மிளகாய் விதை, ஆர்கனோ, மிளகு தூள், உப்பு, அரைத்த கலவைகளை சேர்த்து கிளறி பாஸ்தா சேர்த்து கலந்தால் சுவையான கறிவேப்பிலை பாஸ்தா தயார்