குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு – கந்தளாயில் அதிர்ச்சி!

197

கந்தளாய் பகுதியில் இளைஞன் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (03) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கந்தளாய் பேராற்று வெளி ஆற்றில் குளிக்கச் சென்றிருந்த இளைஞன் ஒருவர் துரதிருஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் இன்று காலை சுமார் 11:30 மணியளவில், நான்கு இளைஞர்கள் ஒன்றாகக் குளிக்கச் சென்றுள்ளனர். வழக்கமாக அவர்கள், ஆற்றில் நீர் அதிகமாக இருக்கும் நேரங்களில், ஒரு பகுதியிலிருந்து குளித்து நீரோட்டத்துடன் மிதந்து அடுத்த பகுதியில் கரையேறும் முறையைப் பின்பற்றிவந்துள்ளனர்.

அதேபோல் இன்றும் குளித்த பின்னர், அவருடன் சென்ற நண்பர்கள், குறித்த இளைஞன் ஏற்கனவே அடுத்த இடத்திற்குச் சென்றுவிட்டதாக நினைத்து, அவரது உடைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளனர் பின்னர் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, அந்த இளைஞன் வீடு திரும்பாததை கவனித்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மதியம் சுமார் 2:00 மணியளவில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

தேடுதலின் போது, அவர் குளித்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில், நீருக்குள் சிக்கிய நிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சடலம் மீட்கப்பட்டு தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் குறித்து கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.