குளவிக் கொட்டால் 7 பொலிஸார் காயம்.!!

85

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுக்கு ரம்பொடை பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப்படுகின்றது என்ற தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, பொலிஸ் குழுவினர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 7 பொலிஸாரில், முதற்கட்டமாக 3 பேர் 1990 சுவசரிய அம்புலன்ஸ் மூலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேலும் 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் இருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், குளவிக் கூடு தானாகவே கலைந்ததா அல்லது யாரேனும் கலைத்ததா என்பது தொடர்பாக கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.