குருணாகலில் பெண் மீது தாக்குதல் : 09 பேர் கைது.!!

15

குருணாகல் – கொகரெல்ல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில்  சமூக வலைதளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (16)  மெடலந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொது வீதியொன்றில் வைத்து ஒரு குழுவினர் அந்தப் பெண்ணைத் தாக்குவது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது.

தாக்குதலின் பின்னர் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

உறவினர்களுக்கு இடையிலான தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  தாக்குதலுக்குள்ளான பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.