கிளிநொச்சி அரசஅதிபருடன் படை படைப்பிரிவு தளபதியின் உத்தியோகபூர்வ சந்திப்பு

110

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கும், புதிதாக பதவியேற்ற 55வது காலாட்படை படைப்பிரிவின் தளபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (05.01.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில், 55வது காலாட்படை படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் HMGE Herath RSP USP ndu psc (General Officer Commanding – 55 Infantry Division) மற்றும் 551 காலாட்படை பிரிகேடின் தளபதி பிரிகேடியர் TBMR Kandekumbura RSP USP ஆகியோர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடினர்.

குறித்த கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாஜினி இன்பராஜ், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் A.M.R.N.K. அழகக்கோன், 55வது காலாட்படை படைப்பிரிவு மற்றும் 551 காலாட்படை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

மாவட்டத்தின் பாதுகாப்பு நிலை, நிர்வாக ஒருங்கிணைப்பு, அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக இச் சந்திப்பில் விரிவாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மேஜர் ஜெனரல் HMGE ஹேரத் அவர்கள், 55வது காலாட்படை படைப்பிரிவின் 30வது தளபதியாக கடந்த 02ம் திகதி 2026 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.