கிளிநொச்சியில் பரபரப்பு! மணல் கடத்தல் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு.!!

133

கிளிநொச்சி – தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் புளியம்பொக்கணை பகுதியில் இருந்து மணல் ஏற்றி பயணித்த கற்பக வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை, பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்றமையால் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமான முறையில் கப்ரக வாகனத்தில் மணல் ஏற்றி பயணிப்பதாக தர்மபு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே துப்பாக்கிச் சூடு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.