கிரிக்கெட் வீரரின் தங்க சங்கிலி மோசடி: இளம் நடிகை கைது.!

133

கிரிக்கெட் வீரர் ஒருவரின் தங்க சங்கிலி மோசடி வழக்கில், இளம் நடிகை ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள், முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ரூ. 9 இலட்சத்திற்கும் அதிக மதிப்புடைய தங்கச் சங்கிலியை பெற்றுக்கொண்டு, அதை உரியவருக்குத் தெரியாமல் அடகு வைத்து சுமார் ரூ. 6 இலட்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, சந்தேகநபரின் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, சங்கிலியை மீட்டெடுத்து முறைப்பாட்டாளருக்கு திருப்பி வழங்க ஏற்பாடுகள் செய்ய முடியும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து, பிரதி நீதிபதி ரூ. 5 இலட்சம் மதிப்பிலான இரு சரீர பிணைகளில் சந்தேகநபரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

மேலும், குறித்த தங்கச் சங்கிலியை பொலிஸார் கைப்பற்றி அடுத்த விசாரணை நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஏப்ரல் 22 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது; விசாரணை முன்னேற்றத்தின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.