கிராந்துருகோட்டையில் விபத்து: தம்பதியர் உயிரிழப்பு, 7 பேர் காயம்!!

211

கிராந்துருகோட்டை பகுதியில் 3ஆம் மைல் கல் அருகே கெப் வாகனமும் உழவு இயந்திரமும் மோதியதில் தம்பதியர் உயிரிழந்ததுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸார் தகவலின்படி, உயிரிழந்தவர்கள் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 57 வயது ஆண் மற்றும் 44 வயது பெண் ஆவர். அவர்கள் பயணம் செய்த கெப் வாகனத்தில் மொத்தம் 13 பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி உள்ளிட்ட ஏழு பேர் காயமடைந்து, அவர்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.