கினிகத்தேனையில் வேட்டை துப்பாக்கி வெடிப்பு: ஒருவர் பலத்த காயம்.!!

127

கினிகத்தேனை, பொல்பிட்டிய, பிடவள பகுதியில் சனிக்கிழமை (04.04.2026) வேட்டை துப்பாக்கி ஒன்று வெடித்ததில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். சம்பவம் இடம்பெற்றதையடுத்து காயமடைந்தவர் உடனடியாக கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவரின் காலில் கடுமையான காயம் ஏற்பட்டதால், அவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தோட்டப் பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.