கால்வாயில் விழுந்து 74 வயது மூதாட்டி பலி; பொலிஸார் தீவிர விசாரணை.!!

135

மாத்தளை – இரத்தோட்டை பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (27) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இரத்தோட்டை, கைகாவல பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.