காலியில் கோர விபத்து: தந்தையும் மகனும் உயிரிழப்பு!

93

காலியில் கோர விபத்து: தந்தையும் மகனும் உயிரிழப்பு

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் தெரிவித்ததன்படி, நேற்று (05) மாலை, பின்னதுவ அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து வெளியேறி காலி நோக்கி பயணித்த கார் ஒன்று, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்த இருவர் கடுமையாகக் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 16 வயதுடைய, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.