கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 வயதுச் சிறுமி பலி.

88

கம்பளை-நாவலப்பிட்டி வீதியில் நேற்று சம்பவித்த வாகன விபத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

கம்பளை நோக்கி பயணித்த கார், பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் காயமடைந்த நிலையில் கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சையின் பயனின்றி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்

உயிரிழந்தவர் 03 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளை தாயார் ஓட்டிச் சென்றதாகவும், காயமடைந்த தாயும் மற்ற 07 வயது சிறுமியும் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.