காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் நிலை தொடர்பில் வெளியான தகவல்.!

133

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி காயமடைந்ததாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் அவர் “பாதுகாப்பாக” இருப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியனின் மகன் தெரிவித்துள்ளார்.

உச்ச தலைவர் காயமடைந்ததாக “செய்திகளைக் கேட்டதாக” யூசெப் பெஜேஷ்கியான் டெலிகிராமில் தெரிவித்துள்ளார். ”

அவருடனான தொடர்புகளை கொண்ட பல நண்பர்களிடம் நான் கேட்டேன், அவர்கள் சொன்னார்கள். கடவுளின் அருளால், அவர் பாதுகாப்பாக இருக்கிறார், எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

கமேனி உச்ச தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து எந்த அறிக்கைகளையும் வெளியிடவில்லை அல்லது பொதுவில் தோன்றவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.