கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளைக் கொன்ற தாய்! நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்.!

242

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற தாய் மற்றும் அவரது காதலனிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் 32 வயது பெண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. குறித்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டதால், குறித்த பெண் 2வதாக திருமணம் செய்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக குறித்த இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

அவருடன் சேர்ந்து வாழ்வதற்காக தனது குழந்தையுடன், குலசேகரன்பட்டினம் அண்ணா சிலை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறி உள்ளார். அங்கும் ஒருவருடன் குறித்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் தகாத காதலாக மாறியது. இந்நிலையில், இவர்களது காதலுக்கு பெண் குழந்தை இடைஞ்சலாக இருப்பதாக கூறி சண்டை ஏற்பட்டுள்ளது.

பொங்கலுக்கு ஒருநாள் முன்னதாக குறித்த பெண்ணை காதலன் பார்க்க வந்துள்ளார். இச்சூழலில் பெண் குழந்தையை வண்டு கடித்து விட்டதாகக் கூறி உடன்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததற்கான காயங்கள் காணப்பட்டது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து பொலிஸார், பெண் குழந்தையின் தாய் , அவரது காதலன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.