கல்லடி பாலம் அருகே அதிர்ச்சி: 45 வயது ஆண் சடலம் கண்டுபிடிப்பு!

263

கல்லடி பாலம் அருகே அதிர்ச்சி: 45 வயது ஆண் சடலம் கண்டுபிடிப்பு!

இன்று வியாழக்கிழமை (26) பிற்பகல் மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகே பரபரப்பை ஏற்படுத்திய துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருந்ததை கண்ட மீனவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். பின்னர், அவர்களின் உதவியுடன் சடலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது.

மீட்கப்பட்ட சடலம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடையது என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் கல்லடி பாலத்திலிருந்து குதித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இவரது அடையாளம் மற்றும் மரண காரணம் குறித்து மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.