கனடா இலஙகை துணை தூதரகம் முன் இனத்தின் சுதந்திரத்திற்கான போராட்டம்!

173

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தில் – கனடா துணை தூதரகம் முன்பு ஈழத்தமிழர் போராட்டம்

டொராண்டோ | கனடா
பிப்ரவரி 4, 2026

ஈழத் தமிழர்களின் நிலம் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பில் இருப்பதை உலக சமூகத்திற்குத் தெரிவிக்கும் நோக்கில், “ஈழம் ஆக்கிரமிப்பு நாள்” இன்று (பிப்ரவரி 4) கனடாவின் டொராண்டோ நகரில் போரட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வு மாலை 2.00 மணிக்கு,
Eglinton Ave East, Toronto (Yonge & Eglinton) பகுதியில் நடைபெற்றது.

ஈழ மக்கள் இன்னும் சுதந்திரம் பெறாத நிலை தொடர்வதனையும,
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொணட ஈழத் தமிழர்கள்,
இலங்கை அரசின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், சர்வதேச சமூகம் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமையை அங்கீகரிக்க வேண்டும்
என வலியுறுத்தினர்.

“End the Occupation” என்ற முழக்கத்துடன், அமைதியான முறையில் இந்தக் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.